அமேசான் விழாக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனை

சென்னை: தீபாவளியை முன்னிட்டு அமேசான் நிறுவனம் அதிரடி சலுகைகளுடன் பிரமாண்ட சிறப்பு விழாக்கால விற்பனை கொண்டாட்டத்தை அறிவித்துள்ளது. இந்த  விற்பனை வரும் 29ம் தேதி  நள்ளிரவு தொடங்கி, அடுத்த மாதம் 4ம் தேதி இரவு 11.59 வரை நடைபெறுகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு 28ம் தேதி மதியம் 12 மணியில் இருந்தே இந்த சலுகை கிடைக்கும். லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு 40% வரை தள்ளுபடி மற்றும் கூடுதல் கேஷ்பேக் கிடைக்கும்.  ஒன்பிளஸ், சாம்சங், விவோ நிறுவனங்களின் 15 புதிய மாடல்கள் அறிமுகமாகின்றன. தவிர, 100க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன்களை சலுகை விலையில் பெறலாம். ₹6,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை உண்டு.

Advertising
Advertising

 இதுபோல், டிவி போன்றவற்றுக்கு 75% வரை தள்ளுபடி, நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்கள் 200க்கும் மேற்பட்டவற்றுக்கு 6,000 சிறந்த டீல்கள், பிரீமியம் லேப்டாப்களுக்கு 40,000 வரை தள்ளுபடி, ஹெட்போன் ஸ்பீக்கர்களுக்கு 60% வரை, பேஷன் பொருட்களுக்கு 90% வரை, ஆடைகள், காலணிகள், வாட்சுகளுக்கு 80% வரை தள்ளுபடி கிடைக்கும்.  வீட்டு உபயோக பொருட்களுக்கு 80% வரை சலுகை, அழகு சாதனங்களுக்கு 80% வரை சலுகை, அலெக்சா, பயர் டிவி ஸ்டிக் உட்பட அமேசான் பொருட்கள், பிரிட்ஜ், ஏசி, பொம்மை புத்தகங்கள் என அனைத்து வகை பொருட்களுக்கு அதிரடி சலுகைகள் கிடைக்கும் என அமேசான் அறிவித்துள்ளது.

Related Stories: