சென்னை பல்கலை தொலை தூரக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: சென்னை பல்கலைக்கழக பதிவாளர் னிவாசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி பிரிவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இளங்கலை, முதுகலை, டிப்ளமா, சான்றிதழ்  படிப்பு என பல்வேறு படிப்புகளுக்கு செமஸ்டர் தேர்வு நடந்தது.இந்நிலையில் ெதாலைதூர கல்விப்பிரிவில் தேர்வு எழுதியவர்களின் இளங்கலை படிப்புகள், பேச்சுலர் ஆப் லைப்ரரி அன்ட் இன்பர்மேசன் சயின்ஸ்(பிஎல்ஐஎஸ்), மாஸ்டர் ஆப் லைப்ரரி அன்ட் இன்பர்மேசன் சயின்ஸ்(எம்எல்ஐஎஸ்), டிப்ளமா,  சான்றிதழ் படிப்புகளுக்கு(2018-19 கல்வியாண்டு, 2019-20 காலண்டர் ஆண்டு மாணவர்கள் நீங்கலாக) தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு மட்டும் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்விப்பிரிவின் இணையதளத்தில்(www.ideunom.ac.in)  நேற்று(செப். 19ம் தேதி) இரவு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இன்று காலை முதல் தேர்வர்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்களின் தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு சென்னை பல்கலைகழக பதிவாளர் னிவாசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: