படகு கவிழ்ந்த விபத்தில் பலி 34 ஆக உயர்வு

திருமலை: ஆந்திராவின் தேவிப்பட்டிணம் மண்டலம், கஞ்சனூர் அருகே கடந்த 15ம் தேதி கோதாவரி ஆற்றில் 73 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 27 பேர் உயிருடனும், குழந்தைகள் உட்பட 12 பேர் சடலமாகவும்  மீட்கப்பட்டனர். இந்நிலையில் 4வது நாளாக நேற்று மீட்பு பணி நடந்தது. இப்பணிகள் குறித்து கிழக்கு கோதாவரி மாவட்ட கலெக்டர் முரளிதர் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘விபத்து நடந்த படகு கோதாவரி ஆற்றில் 300 அடிக்கு கீழ் உள்ளது. மும்பை மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்துள்ள  நிபுணர்கள் குழுவினர் படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் சுமார் 700 பேர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மட்டும் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மொத்தம் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12  பேரை தேடும் பணி நடக்கிறது’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: