பெரணமல்லூர் அருகே பரபரப்பு- பால் வடியும் வேப்பமரம்: மஞ்சள் பூசி பொதுமக்கள் வழிபாடு

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பமரத்திற்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து வழிபட்டனர். பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து நேற்று காலை பால் வழிந்தோடியது. இதனை அப்போது அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். வேப்பமரத்தில் பால் வடிவதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவர்களுக்குள் வேப்ப மரத்தில் அம்மன் இருப்பதாகவும், அதனால் பால் வடிவதாகவும் பேசிக்கொண்டனர். இதையடுத்து அந்த மரத்திற்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மரத்தின் அருகே கோலமிட்டு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதனை பார்க்க அப்பகுதியில திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: