தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு  வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், நாகை, காஞ்சிபுரம், வேலூர் , தஞ்சை உள்ளிட்ட  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. கடந்த  24மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 செ.மீ. மழையும், தஞ்சை மாவட்டத்தில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றது. அத்துடன் சுழல்காற்று வீசும் என்பதால் குமரிக் கடல், மாலத்தீவு, இந்திய பெருங்கடல் பகுதிகளில் மீனவர்கள் 2 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்த படுகிறார்கள் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: