மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு வழங்க கோவில் நிர்வாகம் முடிவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வரும் அனைவருக்கும், தலா ஒரு லட்டு  இலவசமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி முதல் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு இலவசமாக வழங்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கோவிலுக்கு  தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு ஒன்றை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். லட்டுகள் அனைத்தும் மனிதர்கள் கைபடாமல் முழுக்க முழுக்க இயந்திரத்தால் தயாரிக்கப்பட உள்ளது. மேலும், பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கும் புதிய திட்டம் தீபாவளி நாளான அக்டோபர் 27-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: