சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.28,944 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ.3618-க்கு விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டு வந்த ஆபரண தங்கம் விலை, கடந்த வாரத்தில் இதுவரை இல்லாத உச்சமாக 30 ஆயிரத்து 120 ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் கடந்த 5ம் தேதிக்குப் பின் தங்கத்தின் விலை சரிந்து வருவதுடன், ஒரு வாரத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து ரூ.28,944-ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.