பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு; சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த தென்மாவட்ட டிக்கெட்டுகள்

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழர் திருநாளான தை பொங்கல் அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளிற்காக வெளியூர்களில் பணி புரியும் லட்ச கணக்கானவர்கள் சொந்த ஊர் செல்வது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகி வருகின்றது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை என்பதால் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வத்துடன் இருந்தனர்.

தென்மாவட்டங்களுக்கான டிக்கெட்டுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன. பாண்டியன், முத்துநகர், வைகை, பொதிகை, உள்ளிட்ட விரைவு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு அனைத்தும் முடிந்தது. தென் மாவட்டங்களுக்கு ரயில்களில் பயணம் செய்யும் 85% மக்கள் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ததால், ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஜனவரி 12-ம் தேதிக்கான முன்பதிவு 14-ம் தேதியும், ஜனவரி 13-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு 15-ம் தேதியும் செய்யலாம். பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப வசதியாக ஜனவரி 19ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 20ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 22ஆம் தேதியும் தொடங்கும்.

Related Stories: