குரூப் 4 தேர்வு கீ ஆன்சர் வெளியீடு

சென்னை: 6,491 பணியிடத்துக்கு 13,59,307 பேர் தேர்வு எழுதிய குரூப்-4 தேர்வுக்கான கீ-ஆன்சரை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 4 பதவி) அடங்கிய 6491 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த 1ம் தேதி நடத்தியது. இத்தேர்வை எழுத 16,29,864 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 83.4 சதவீதம் பேர்  மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதாவது, 13,59,307 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்துள்ளனர். 16.6 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். அதாவது 2 லட்சத்து 70 ஆயிரத்து 557 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தனது இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் -4 தேர்வுக்கான உத்தேசவிடைகள் (கீ-ஆன்சர்) வெளியிட்டது.

Advertising
Advertising

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: இத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் பொது அறிவுத்தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகியவற்றைத் தவிர ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப்பட்ட  விடைகளுள் சரியான விடை குறியீடு மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. தேர்வின் போது தேர்வர்களுக்கு எவ்வகையான குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப் பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள  கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மேற்படி வினாத்தாள் தொகுப்பின் பொது அறிவுத்தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களைத் தவிர இதர வினாக்களுக்கான விடைகளுக்கு தேர்வர்கள் தங்களது மறுப்பினைத்  தெரிவிக்கலாம்.

பொது அறிவுத் தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரை செய்ய தேர்வாணையம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இருப்பினும், தேர்வர்கள் மேற்படி மூன்று  வினாக்களுக்கும் அவர்களது கருத்துக்களை தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் ஆதாரத்துடன் பெறப்படும் மறுப்புகள், கருத்துக்கள்ஆகியவை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டு விடைகள் இறுதி செய்யப்படும் உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் www.tnpsc.gov.in என்ற  இணைய வழியில் மட்டுமே மூலமாக தெரிவிக்க வேண்டும். அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.  மேலும் 17.09.2019-க்கு பிறகு இணையவழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.

Related Stories: