கிங்ஸ் இருக்கட்டும்; முதலில் எய்ம்ஸ் கொண்டு வரட்டும்: எம்ஆர்கே.பன்னீர்செல்வம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்

ஆட்சி முடிவதற்கு இன்னும் ஒன்றரை வருடமே உள்ளது. 9 வருடமாக இந்த அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை. புதுசா சுகாதாரத்துறையில் ஒன்றும் கொண்டு வரவில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 108 ஆம்புலன்ஸ்  திட்டத்தை இன்னும் விரிவுப்படுத்தவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதோடு சரி. தமிழகத்தில் சென்னை தான் மெடிக்கல் டூரிஸமாக உள்ளது. இதனால், வெளிநாட்டை சேர்ந்த நோயாளிகள் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். இதில், லண்டனில் இருந்து கிங்ஸ் மருத்துவமனை கொண்டு வருவோம் என்று கூறுவது  தேர்தல் ஸ்டன்ட். அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை முதலில் கொண்டு வரட்டும். அந்த மருத்துவமனையை கொண்டு வரவே 4 ஆண்டுகள் பிடிக்கும். அதன்பிறகு அவர்கள் கிங்ஸ் மருத்துவமனை கொண்டு வர ஒப்பந்தம் போட்டு, நிலம்  தேர்வு செய்து, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது என்பது இப்போதைக்கு முடியாத விஷயம். தேர்தல் விளம்பரத்திற்காக பேசும் ஒரு நாடகம். முதல்வர் உட்பட அமைச்சர்கள் கிங்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு  சென்றார்களா அல்லது மருத்துவமனை கொண்டு வருவதற்கு ஒப்பந்தம் செய்தார்களா என்பது தெரியவில்லை. காரணம், அவர்களையே இங்கே அழைத்து வந்து ஒப்பந்தம் செய்யலாம். ஆனால், இவர்கள் போய் அங்கு ஒப்பந்தம் செய்ய என்ன  காரணம் என்பது மர்மமாக உள்ளது.

திமுக ஆட்சியில் கலைஞர் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் உரிய நேரத்தில் தனியார் மருத்துவமனை மூலம் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அதே நேரம் அரசு  மருத்துவமனைக்கு சென்றால் சீனியாரிட்டி அடிப்படையில் செல்வதற்குள் உயிரே போய் விடும். கோல்டன் ஹவரில் தான் ஒரு உயிரை காப்பாற்ற முடியும் என்பதால் தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்வராக ஜெயலலிதா இருந்த போதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். பல கோடி செலவு செய்து இரண்டு முறை முதலீட்டாளர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டால் தொழில் அதிபர்கள்  வந்ததாக தெரியவில்லை. ஆனால், தொழிலதிபர்கள் வந்தது போல் நாடகத்தை நடத்தினார்கள். எத்தனை முதலீடு வந்தது, எத்தனை தொழிற்சாலை வந்தது என்று கணக்கு தெரியவில்லை. இப்போது ஆட்சி முடியும் நேரத்தில் முதல்வர்கள் உட்பட அமைச்சர்கள் சுற்றுலா செல்கின்றனர். ஒரு பக்கம் லண்டன் என்கிறார்கள். ஒரு பக்கம் பின்லாந்து என்கிறார்கள். எல்லோரும் டிசைன், டிசைனாக பேண்ட் போட்டு ஏமாற்றுகின்றனர்.  அரசாங்க செலவில் சுற்றுலா சென்றுள்ளனர்  என்பதே உண்மை. ஆனால், ஓட்டு போட்டவர்கள் சாலையில் தான் நிற்கிறார்கள்.

வெளிநாட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டதாக அரசு செய்தி குறிப்பு தருகிறது. அதில், வந்த படத்தை பாருங்கள். அதில், எத்தனை பேர் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியும். எத்தனை தொழிலதிபர்கள் கலந்து  ெகாண்டார்கள் என்பதை படத்தை பார்த்தாலே தெரியும்.  இப்போது இருக்கிற தொழிற்சாலையில் வேலை செய்யும் பணியாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு முடிவுகட்டாமல் தொழிற்சாலை கொண்டு வரப்போவதாக  கூறுகின்றனர். அவர்கள் ஊழலை மறைக்க அடிக்கும் ஸ்டன்ட். தேர்தல் காலத்திற்காக அடிக்கும் ஸ்டன்ட். இன்னும் சொல்ல போனால் மக்களுக்கு சந்தேகம். இவர்கள், சம்பாதித்த பணத்தை தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக வெளிநாட்டிற்கு  சென்று உள்ளனரோ என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. ஒரு பக்கம் லண்டன் என்கிறார்கள். ஒரு பக்கம் பின்லாந்து என்கிறார்கள். எல்லோரும் டிசைன், டிசைனாக பேண்ட் போட்டு ஏமாற்றுகின்றனர்.

Related Stories: