மேட்டூர் அனல் மின்நிலையத்துக்கு 15 லட்சத்தில் ‘ஹைட்ரோகுளோரிக் ஆசிட்’

சென்னை: சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையம், 15 லட்சத்துக்கு ‘ஹைட்ரோகுளோரிக் ஆசிட்’ வாங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:சென்னை, மேட்டூர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின்நிலையங்கள் உள்ளன. இங்கு 3,500 மெகாவாட்டிற்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உள்ள அனல் மின்நிலையங்களில் மேட்டூர் மின்நிலையம் முக்கிய  பங்கு வகிக்கிறது.அங்கு பழைய மற்றும் புதிய அனல் மின்நிலையங்கள் உள்ளன. பழைய அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் மூலம் 840 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதேபோல் புதிய அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.பிறகு இந்த மின்சாரம் நெய்வேலிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பிரித்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட மின்நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கும் பணிக்கு 15,11,580 க்கு 400 ெமட்ரிக் டன் அளவிலான ‘ஹைட்ரோகுளோரிக் ஆசிட்’ வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து  வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: