சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னையில் 5 இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி ஊர்வலம் புறப்படும் இடம் முதல் கரைக்கும் இடம் வரை கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் 5 ஆயிரம் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 2ம் தேதி கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மாநகரில் பொது இடங்களில் 2,600 விநாயகர் சிலைகள் வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கினர். அதன்படி இந்து  அமைப்புகள், கோயில் நிர்வாகம் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடந்த 5ம் தேதி முதல் இன்று வரை  ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.அதை தொடர்ந்து பொது மக்கள் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை 5ம் தேதி முதல் கரைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்து முன்னணி, இந்த மக்கள் கட்சி, இந்து மக்கள் முன்னணி, சிவசேனா, அகில இந்திய இந்து சத்திய சேனா  உட்பட இந்து அமைப்புகள் சென்னை முழுவதும் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்றும், இன்றும் ஊர்வலம் எடுத்து சென்று கரைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி நேற்று 155க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை   பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கிரேன் உதவியுடன் பலத்த பாதுகாப்புடன் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.

அதேபோல், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர்   பாப்புலர் எடை மேடை பின்புறம், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய 5 கடற்கரை  பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டது. இதையடுத்து இன்று கடைசி நாள் என்பதால் மீதமுள்ள விநாயகர் சிலைகள்  அனைத்தும் கரைக்கப்படும் என்பதால் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களில், சென்னை காவல்துறையினர் மூலம் கிரேன்கள், உயிர் காக்கும் குழுக்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்படவுள்ளது. மேலும், விநாயகர் சிலைகள் அனுமதிக்கப்பட்ட ஊர்வல பாதைகளிலும், சிலை கரைக்கும் இடங்களிலும் காவல்துறையினர் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. கடலில் கரைக்க வாகனத்தில் கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகளை ராட்சத கிரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்படவுள்ளனர். கடலில் யாரும் இறங்காத வகையில்  சிலைகள் கரைக்கப்படும். பட்டினப்பாக்கம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் உட்பட 5 இடங்களில் தடுப்புவேலிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை முழுவதும் 10 ஆயிரம்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும், மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊர்வலத்தில் மதஉணர்வு தூண்டும் வகையில் பேச கூடாது. ரசாயனம் கலந்த சிலைகள் கரைக்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட வழி தடங்களில் மட்டும் ஊர்வலம் கொண்டுவரப்பட்ட வேண்டும். லாரி அல்லது வேன்களில்  மட்டும் சிலைகள் கொண்டு வர வேண்டும். மூன்று சக்கர ரிக்‌ஷாக்களில் கொண்டு வர கூடாது. கைகளில் சென்று கடலில் சிலையை கரைக்க அனுமதி இல்லை. கடலில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. உயர் தொலைநோக்கி கோபுரம்  அமைக்கப்பட்டுள்ளது. கிரைன் மூலமாக சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட உள்ளது. மேலும் மது அருந்திவிட்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தீயணைப்பு துறை மற்றும் மருத்துவ குழுவினர் முழுவீச்சில் பணியில்  ஈடுபடுவார்கள். சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு முழுமையாக நடைபெற உள்ளது. போலீஸ் உயர்அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சென்னை மாநகராட்சி உதவியுடன் பெரிய ரக ஜெசிபி, சிறிய ரக ஜெசிபி என இரண்டு வண்டிகள் விநாயகர் சிலையை கொண்டு  வரும் வண்டிகளுக்கு வழிபாதையை அமைத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சிலையை கடலில் கரைப்பதற்கு மேலும், பட்டினப்பாக்கம் கடற்கரையில் இன்று 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுகின்றனர்.

பணியின் போது மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் ஒய்வு எடுப்பதற்கு மேற்கூரை, கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊர்வலம் அமைதியான முறையில் நடப்பதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு  ஏற்படுகளில் 2 கூடுதல் கமிஷனர்கள், 6 இணை கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊர்வலத்தில் மதஉணர்வு தூண்டும் வகையில் பேச கூடாது. ரசாயனம் கலந்த சிலைகள் கரைக்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட வழி தடங்களில் மட்டும் ஊர்வலம் கொண்டுவரப்பட்ட வேண்டும்.

Related Stories: