வருவாய் இல்லாததால் பூஜை நடைபெறாத 180 கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம்: அறநிலையத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் மட்டுமே வருவாய் வருகிறது. மற்ற 40 ஆயிரம் கோயில்களுக்கு வருவாய் இல்லாததால், அந்த கோயில்களில் ஒரு கால பூஜை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில், ஒரு கால பூஜை நடைபெறாத கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த கோயில்களுக்கு என்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த கோயில்களில் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. தற்போது வரை 12,745 கோயில்களில் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளன. இந்த நிலையில், மேலும், 180 சிறிய கோயில்களில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படவிருக்கிறது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரு கால பூஜை திட்டத்தில் இதுவரை 12,745 கோயில்களுக்கு தலா ₹1 லட்சம் வீதம் ₹127.45 கோடி வைப்பு நிதி முதலீடு செய்யப்பட்டு ஒரு கால பூஜை திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2019-20ம் நிதியாண்டில் இத்திட்டத்தினை மேலும் 180 கோயில்களுக்கு விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் நிதி ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது.

Related Stories: