வெப்ப சலனம் நீடிப்பு 16 மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் தொடரும் வெப்ப சலனம் காரணமாக 16 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடலோரப் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து  வருகிறது. அதிகபட்சமாக நேற்று, கோதையாறு பகுதியில் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. சின்னகல்லார், வால்பாறை 60 மிமீ, தேவாலா, குழித்துறை, பாபநாசம் 40மிமீ, பெரியாறு, நடுவட்டம், செங்கோட்டை, நாகர்கோவில், தக்கலை, மயிலாடி 30மிமீ, பேச்சிப்பாறை, திருப்பத்தூர், பூதப்பாண்டி 20மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வெப்ப சலனம் மேலும் நீடித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது  முதல் மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையிலும் மாலை நேரங்களில் இடியுடன் மழை பெய்யும்.

Related Stories: