தூத்துக்குடி அருகே கரை ஒதுங்கிய படகு

தூத்துக்குடி,: தூத்துக்குடி மாவட்டம், கீழ வைப்பார் பகுதி கடற்கரையில் ஒரு ரப்பர் படகு கரை ஒதுங்கியிருப்பதாக, தீவிரவாதிகள் வேட்டையில் ஈடுபட்டி ருந்த மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  மரைன் போலீசார் அங்கு  சென்று படகை சோதனையிட்டனர். அந்த படகு தூத்துக்குடியை சேர்ந்த பிரபல உப்பள அதிபருக்கு சொந்தமானது, காற்றின் வேகத்தில் கயிறு அறுந்து அங்கிருந்து சுமார் 1 மைல் தூரத்திற்கு இழுத்து வரப்பட்டு கீழவைப்பாரில் கரை ஒதுங்கியது  தெரிந்தது.

Related Stories: