டி.கே.ரங்கராஜனுக்கு தலைவர்கள் நன்றி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமை அலுவலக அறிக்கை: ஐசிஎப் இணைப்பு ரயில்பெட்டி தொழிற்சாலையை மத்திய அரசு கார்ப்பரேட்மயமாக்க முயற்சி செய்து வருகிறது.இந்த முடிவை கைவிட கோரி கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் டி.கே. ரங்கராஜன் எம்.பி. பேசினார்.எனவே, அதற்கு நன்றி தெரிவித்தும், முடிவை கைவிட தொடர்ந்து வலியுறுத்துமாறு கேட்டும் ஐசிஎப் தொழிற்சாலையில் உள்ள ஐஎன்டியுசி., எச்எம்எஸ்., சிஐடியு., பிஎம்எஸ், தொமுச மற்றும் எஸ்.சி., எஸ்.டி. சங்கத்தினர் உட்பட அனைத்து தொழிற்சங்க தலைவர்களும், சென்னையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் டி.கே. ரங்கராஜன் எம்.பியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததோடு, தொடர்ந்து ஆதரவு அளிக்க கேட்டுக்கொண்டனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: