பிகில் கதைக்கு உரிமை கோரிய வழக்கு உதவி இயக்குனர் வாபஸ்

சென்னை: தெறி, மெர்சல் திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் விஜய், நடிகை நயன்தாரா நடிப்பில் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு, இயக்குனர் அட்லி பிகில் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தநிலையில், உதவி இயக்குனர் செல்வா என்பவர், இது தன்னுடைய கதை என்றும், கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவிட்டு இருப்பதாகவும் கூறி திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் 4 மாதங்களாக நடைபெற்று வந்தது.

Advertising
Advertising

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபோவதாக கூறிய செல்வா, தான் உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதியளித்ததையடுத்து உதவி இயக்குனர் வழக்கை வாபஸ் பெற்றார். ஓரிரு நாட்களில், செல்வா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரியவந்துள்ளது.

Related Stories: