392 ரயில்வே ஊழியர்களுக்கு அதாலத் மூலம் பென்ஷன்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ரயில்வேயில் பணிபுரிந்த 392 பேருக்கு அதாலத் மூலம் ரூ.6,67,985 ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்பவர்கள் பணிநிறைவு பெற்றதும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பல்வேறு பிரச்னைகள் காரணமாக பலருக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதையடுத்து, அவர்களுக்கான பிரச்னைகளை தீர்த்து ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.  அந்த வகையில், சென்ட்ரல் ரயில்வே தலைமை அலுவலகத்தில் பென்ஷன் அதாலத் என்ற பேரில் ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை போக்கும் வகையில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய சென்னை, சேலம், திருச்சி, பெரம்பூர், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் போன்ற கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்பவர்கள் எலக்ட்ரீசியன், மெக்கானிக், சிக்னல் பிரிவு, தொலைதொடர்பு துறையில் பணிபுரியும் 392 பேர் கலந்து கொண்டு தனித்தனியாக மனு அளித்தனர். இவர்களில் 212 பேரின் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு உடனடியாக ரூ.6,67,985 ஓய்வூதியம் வழங்கப்பட்டது. மேலும் மீதமுள்ள 180 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: