அமைச்சர்களை முதல்வர் மாற்றலாம்: அதிமுக எம்எல்ஏ பேட்டி

மதுரை: நிர்வாகரீதியாக அமைச்சர்களை முதல்வர் மாற்றி கொள்ளலாம் என ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மதுரையில் தெரிவித்தார். மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ‘சி’ குறுவட்ட தடகள விளையாட்டு போட்டி நேற்று நடந்தது. போட்டியை மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: விளையாட்டு துறைக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுத்து தனி அமைச்சகத்தை ஏற்படுத்தினார். விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 2 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 சதவீதமாக உயர்த்தியுள்ளார். விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களுக்கு அரசு வேலை நிச்சயம் கிடைக்கும். அமைச்சர்களை நீக்க முதல்வருக்கு அதிகாரம் உள்ளது. நிர்வாகரீதியாக அவர் அமைச்சர்களை மாற்றலாம். புதிய அமைச்சர்களை நியமிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார். ராஜன் செல்லப்பா சமீபத்தில் நீக்கப்பட்ட மணிகண்டனுக்கு பதிலாக தன்னை அமைச்சராக்கும்படி கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: