வந்தாரை வாழவைக்கும் சென்னை

சென்னை:  தமிழகத்தின் தலைநகரமாக சென்னை உள்ளது. 1996ம் ஆண்டுக்கு முன்னர் மெட்ராஸ் என்றே அழைக்கப்பட்டு வந்தது. வந்தாரை வாழவைக்கும் நகரங்களில் சென்னை முக்கியமானது. அவரவர் படிப்பு, வயது, தகுதிக்கு ஏற்ப ஐடி துறையில் இருந்து கூலி வேலைகளும் செய்து பிழைத்துக் கொள்ளலாம். அதற்கு உதாரணமாக சோழிங்கநல்லூரையும், கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வெளியே தள்ளுவண்டியில் இட்லி விற்பவர்களையும் கூறலாம்.

அதுமட்டுமில்லால் சர்வதேச சந்தையை குறிவைக்கும் அளவுக்கு சென்னையில் தயாராகும் கார்களை கப்பல்கள் மூலம் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் சென்னைக்கு இருக்கிறது. இன்று தமிழர்கள் மட்டுமல்லாமல் மராத்தியர்கள், குஜராத்திரியர்கள், சீனர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கு படிப்பு, வேலைகளை தரும் முக்கிய நகரமாக சென்ைன மாறி உள்ளது. எனவே தான் சென்னை, வந்தாரை வாழவைக்கும் நகரம் என்று அழைக்கப்படுகிறது.

Related Stories: