பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதி குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் கீழ் உள்ளாட்சி அமைப்புகளின்  கடமைகளும், பொறுப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சென்ைன நகர கார்ப்பரேசன் சட்டம் 1919ன் 353வது பிரிவின்படி, சென்னையில் பிளாஸ்டிக்  கழிவுகள் மேலாண்மை துணை விதிகள்-2019 உருவாக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை துணை விதிகள்- 2019ன் நகல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல அலுவலகங்கள், வட்டார துணை ஆணையர்  அலுவலங்கள் (வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு) மற்றும் திடக்கழிவு மேலாண்மை துறை, ரிப்பன் மாளிகை ஆகிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக அனைத்து பொது வேலை நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி  வரை வைக்கப்படும்.

பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை துணை விதிகள்-2019 பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையத்தளத்திலும் (www.chennaicorporation.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்வையிட்டு, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 30  நாட்களுக்குள் கூடுதலாக / நீக்குவதற்கான கருத்துக்களை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நேரடியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: