கிராம உதவியாளர் செயற்குழு கூட்டம்

மொடக்குறிச்சி: கிராம உதவியாளர்கள் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு மொடக்குறிச்சி வட்ட தலைவர் ஜான் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் ரவிச்சந்திரன் வரவேற்றார். வட்ட தலைவர் கோவிந்தசாமி, கார்த்தி, சோமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொருளாளர் அம்புரோஸ், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தலைவர் சந்திரசேகரன், மாநில பொருளாளர் ஏசையா,மாநில தலைவர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கிராம உதவியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து அலுவலக உதவியாளர்களுக்கு இணையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு வழங்குவது போல சதவீத அடிப்படையில் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.

Advertising
Advertising

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் என்ற உச்ச வரம்பைத் தளர்த்தி 5 ஆண்டாக குறைக்க வேண்டும், வருவாய் துறையில் உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை 50 சதவீத உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணியமர்த்துவதை தவிர்க்க வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு மாத இறுதியில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் வட்ட பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: