உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே பெரும் கனமழை பெய்ததில் 17 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கிளவுட் பர்ஸ்ட் எனப்படும் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரும் கனமழை பெய்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர்காசி அருகே மோரி தெஹ்சில் பெரும் கனமழை பெய்ததில் 17 பேர் இறந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை செயலர் முருகேசன் அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  

Advertising
Advertising

இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அப்பகுதியில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்தன. கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது என்பது குறிப்பித்தக்கது. மேலும் அவர்களை மீ்ட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Related Stories: