தென்மேற்கு பருவமழையால் குடிநீர், பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் 198 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் 132 டிஎம்சி நீர் இருப்பு

சென்னை: தென்மேற்கு பருவமழையால் குடிநீர்,பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் 198 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் 132 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இந்த அணைகளின் நீர் மட்டம் மேலும் உயரும் என்று பொதுப்பணித்துறை  அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலை ஓட்டியுள்ள மாவட்ட பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக குடிநீர்  மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் 198 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர், பவானி சாகர், பாபநாசம் உட்பட 15 அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 15 அணைகளில் 135 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து  இந்த அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன்காரணமாக, அணைகளின் நீர் மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் என்பதால்  அணைகளில் நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் கடந்தாண்டில், 15 அணைகளில் 172 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: