ஆட்டோமொபைல்,..நியோஸ் புதிய கிராண்ட் ஐ10 அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார்களில் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் மாடலும் ஒன்று. இந்த கார், ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று. இந்த கார், நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமலே விற்பனையில்  இருந்து வந்தது. தற்போது அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை அறிமுகம் செய்யும் விதமாக, ஆகஸ்ட் 20-ல் கிராண்ட் ஐ10 மாடலை ஹூண்டாய் நிறுவனம் வெளியீடு செய்ய உள்ளது. அதேசமயம், 11,000 என்ற முன்தொகையில் இந்த  காருக்கான புக்கிங் துவங்கியுள்ளது. இப்புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பல்வேறு புதிய சிறப்பு மாற்றங்களை பெற்றுள்ளது. புதிய ஸ்டைலை பெற்ற இந்த காரில், கிராண்ட் ஐ10 என்ற பேட்ஜூடன் புதிதாக என்ஐஓஎஸ் (NIOS) என  எழுதப்பட்டுள்ளது. இப்புதிய பேட்ஜ், கிராண்ட் ஐ10 பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றிருப்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.  புதிய டியூன் அப் பெற்ற இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வில் இந்த கார் கிடைக்கும். ஸ்போர்ட்டி  லுக்கையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

Advertising
Advertising

அதற்கேற்ப, டிஆர்எல்களுடன் கூடிய பெரிய அளவிலான கேஸ்கேட் கிரில், புத்தம் புதிய தோற்றத்திலான ஹெட்லேம்ப், சிறிய பனி விளக்குடன்கூடிய பம்பர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளன. புதிய டிசைனிலான அலாய் வீலும்  இணைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் வெனியூ ரக காரின் உள்கட்டமைப்பை ஒத்தவாறு, இதன் இண்டீரியரும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில், புதிய டேஷ்போர்ட், புளூ லிங்க் கனெக்டட் தொழில்நுட்ப வசதியுடன்கூடிய டச் ஸ்கிரீன்  இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கூடுதல் பாதுகாப்பு அம்சம் மற்றும் பிரிமியம் ரகத்திலான மெட்டீரியல்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், 8 இன்ச் அளவு கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும்  ஆன்ட்ராய்டு ஆட்டோ மென்பொருள் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.  அதிக இடவசதி மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களை பெற்ற நவீன மாடலாக இந்த கார் களமிறங்கியுள்ளது.

இந்த காரில், பாதுகாப்பு அம்சத்திலும் குறைவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், இரண்டு ஏர் பேக், இபிடி வசதியுடன்கூடிய ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த காரில், பிஎஸ்-VI தரத்திலான  1.2 லிட்டர் கப்பா இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, தற்போது விற்பனையில் இருக்கும் கிராண்ட் ஐ10 மாடலைப்போன்றே 83 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த இன்ஜினில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மேனுவல் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன்,  மலிவு ரக ஏஎம்டி கியர்பாக்ஸை கொண்டு, டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ரீபிளேஸ் செய்யவும் முடியும். இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ்தான் புதிய சான்ட்ரோ காரிலும் இடம்பெற்றுள்ளது. இத்துடன், பிஎஸ்-VI-ன் இரண்டாம்  வெர்ஷனையும் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அது, 1.2 லிட்டர் டீசல் யூனிட்டாகும்.

இது, மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும். அதேசமயம், ஹூண்டாய் நிறுவனத்தின் மூலம் வெளிவரும், முதல் பிஎஸ்-VI தரத்திலான கார் என்ற பெருமையை இந்த கிராண்ட் ஐ10 என்ஐஓஎஸ் கார் பெற்றுள்ளது.

இப்புதிய கார், பிஎஸ்-VI தரத்திற்கு உயர்த்தப்பட்டிருப்பதால், இதன் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தற்போது விற்பனையில் இருக்கும் கிராண்ட் ஐ 10 மாடலைவிட ₹25,000 பிரீமியம்  தொகையில் எதிர்பார்க்கலாம்.

Related Stories: