தங்கம் விலை சவரனுக்கு 280 குறைந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த 1ம் தேதி முதல் உயர்ந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு சாதனையும் படைத்து வருகிறது. அதாவது, கடந்த 1ம் தேதி ஒரு சவரன் 26,480, 2ம் தேதி 27,064, 3ம் தேதி 27,328, 5ம் தேதி 27,680, 6ம் தேதி 27,784, 7ம் தேதி 28,376, 8ம் தேதி 28,464, 9ம் தேதி 28,552, 10ம் தேதி 28,656, 12ம் தேதி சவரன் 28,824, 13ம் தேதி 29,016க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி  தங்கம் விலை திடீரென சரிவை சந்தித்தது. சவரனுக்கு 392 குறைந்து ஒரு சவரன் 28,624க்கு விற்கப்பட்டது. இந்த விலை சரிவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறுநாளே தங்கம் விலை அதன் போக்கை காட்டியது. அதாவது, நேற்று முன்தினம்(15ம் தேதி) தங்கம் விலை கிராம் 49 அதிகரித்து ஒரு கிராம் 3,618க்கும் சவரனுக்கு 320 அதிகரித்து ஒரு சவரன் 28,944க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. கிராமுக்கு 35 குறைந்து ஒரு கிராம் ₹3,583க்கும் சவரனுக்கு 280 குறைந்து ஒரு சவரன் 28,664க்கு விற்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: