காவல் ஆய்வாளரை அவமரியாதையாக பேசிய ஆட்சியர் பொன்னையாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காவல் ஆய்வாளரை அவமரியாதையாக பேசியது ஏன்? என்பது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தலைமை செயலர் மற்றும் தமிழக டி.ஜி.பி.க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காவல் ஆய்வாளரை அவமரியாதையாக பேசிய ஆட்சியர் பொன்னையா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி தலைமை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

அத்திவரதர் வைபவத்தில் ஒரு காவலர் அதிகாரியை மாவட்ட ஆட்சியர் கண்டிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆட்சியர் கோபத்திற்கு ஆளான காவல் ஆய்வாளர் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சீருடை அணிந்த காவலரை காஞ்சிபுரம் ஆட்சியர் பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டியதற்கு கடும் கண்டனம் வலுத்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளித்தார். அதில் உணர்வுப்பூர்வமாக பேசப்பட்ட வார்த்தைகளை பெரிதுபடுத்த வேண்டாம் என தெரிவித்தார். இதனிடையே காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: