மக்களிடையே வணிக பரிமாற்றத்தை விரிவாக்க டெல்லி-ரஷ்யா இடையே நேரடி விமான சேவை: விளாடிவோஸ்டாக்கில் மத்தியமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி

விளாடிவோஸ்டாக்: டெல்லி-ரஷ்யா இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ்  கோயல் தலைமையில், கோவா, அரியானா, உத்தர பிரதேச மாநில முதல்வர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் உள்ளடங்கிய குழு 3 நாள் பயணமாக நேற்று ரஷ்யா  சென்றது. இருநாட்டு வணிக ரீதியான உறவுகளை  மேம்படுத்தவும், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வணிக பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே, இன்று விளாடிவோஸ்டாக் நகரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்தியமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நேரடியாக விமான சேவை இப்போது இல்லை. எனவே, டெல்லியில் இருந்து  ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்திற்கு நேரடி விமான சேவை தொடங்கினால் சிறப்பாக இருக்கும். குறைந்த பட்சம் டெல்லி- விளாடிவோஸ்டாக் வரையிலாவது நேரடி விமான சேவையை உறுதி செய்யலாம். இது இரு தரப்பிலான வணீக  ரீதியான உறவு மேம்பட வழிவகுக்கும். இது நேற்றிரவு தோன்றிய எண்ணமே. எனவே இதை விரைவாக செயல்படுத்த முயல்வோம். இது, மக்களிடையே வணிக பரிமாற்றத்தை விரிவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும் என்று நான்  கருதுகிறேன். இரு நாடுகளுக்கும் இடையே சாத்தியமான வர்த்தகம் நடைபெற இது பெரிதும் உதவும் என்று தெரிவித்தார்.

Related Stories: