ஜூலை 31க்கு மேல் வருமான வரி செலுத்துபவர்களுக்கு அபராதம் விதிப்பு : வருமான வரித்துறை தகவல்

சென்னை : வருமான வரி கணக்குகளை வரும் 31ம் தேதிக்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு வருமான வரித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜ், சென்னை வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். 80 வயதுக்கு மேலுள்ள மூத்த குடிமக்கள் மட்டுமே படிவ வடிவில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்த ரங்கராஜ், மற்ற அனைவரும் ஆன்லைனில் மட்டுமே கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

ஜூலை 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்கல் செய்யப்படும் கணக்குகளுக்கு அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ரங்கராஜ் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ரூ. 5 லட்சம் வருமானம் பெறுபவர்கள் டிசம்பருக்குள் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.5000 வரை அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். கடைசி நேரம் வரை காத்திருக்கமால் உரிய நேரத்திற்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த ஆண்டுக்கான வருமான வரியை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பின் தாக்கல் செய்ய முடியாது என்றும் ரங்கராஜ் கூறியிருக்கிறார்.

Related Stories: