தாமதிக்காதீங்க கடைசி நேரத்துல பதறாதீங்க...!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இந்த மாதம் 31ம் தேதி கடைசி. மாத சம்பளதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய படிவம் 16 அவசியம் தேவை. ஆனால், நிறுவனங்கள் டிடிஎஸ் தாக்கல் செய்வதில் கடைசி நேரத்தில் சில கூடுதல் விவரங்கள் கேட்கப்பட்டதால், நிறுவனங்கள் டிடிஎஸ் படிவம் 24கியூ தாக்கல் செய்வதற்கான கெடுவை ஜூன் 30ம் தேதியில் இருந்து மே 31ம் தேதிக்கு தள்ளி வைத்தது.  இதற்கேற்ப, படிவம் 16 படிவத்தை ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்குவதற்கான கெடு தேதியை ஜூன் 15ம் தேதியில் இருந்து ஜூலை 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதன்பிறகு மாத சம்பளதாரர்கள் வருமான வரி கணக்கு (ரிட்டர்ன்) தாக்கல் செய்ய சுமார் 20 நாட்கள்தான் பாக்கி என்பதால், ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கெடு ஒத்திவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இதுகுறித்து வருமான வரி ஆலோசகர்கள் சிலர் கூறியதாவது: மாத சம்பளதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கெடு நீட்டிக்கப்பட்டால் நல்லது. ஏனென்றால், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஒரு வாரம் முன்புதான் டிடிஎஸ் படிவம் வழங்கியுள்ளன.

படிவம் 16ல் பிழை ருந்தால் அதை நிறுவனத்திடம் தெரிவித்து சரி செய்வதற்கு போதுமான அவகாசம் தேவை. வருமான வரி கணக்கு தாக்கல் படிவம் 2 தாக்கல் செய்பவர்கள் சம்பள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். இதுதவிர, பட்டியலிடப்படாத நிறுவனங்களில் பங்குகள் வாங்கியிருந்தால், எவ்வளவுக்கு வாங்கியது, அதன் முக மதிப்பு என்ன ஆகிய விவரங்களையும் குறிப்பிட வேண்டியது இருக்கும்.  இருந்தாலும், மாத சம்பளதாரர்கள் காத்திருக்க தேவையில்லை. போதுமான விவரங்கள் கைவசம் வைத்திருப்பவர்கள் உடனடியாக கணக்கு தாக்கல் செய்யலாம். அப்போதுதான் கடைசி நேரத்தில் தாக்கல் செய்தால் சர்வர் பிரச்னை ஏற்படும். அதோடு கெடு நீட்டிக்காவிட்டால் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.

Related Stories: