அத்திவரதர் தரிசன ஏற்பாடு தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனை

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் அபூர்வ வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர்சிங், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பனீந்திரரெட்டி, தமிழக டிஜிபி திரிபாதி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: