தமிழர்கள், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் வலியுறுத்தல்

சென்னை: 7 தமிழர்கள் மற்றும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அளித்த பேட்டி:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று, ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால், தமிழக ஆளுநர் 10 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளார்.

எனவே ஆளுநர் விரைவாக ஒப்புதலை வழங்க வேண்டும். ஒப்புதலை விரைவாக பெற தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் தர வேண்டும்.மேலும், சிறையில் இருப்பவர்களுக்கு கருணை அடிப்படையில் விடுதலை வழங்குங்கள் என்று கூறும் பொழுது, 10 ஆண்டுகள் கழிந்த அனைத்து முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் உடனே விடுதலை செய்திட வேண்டும். மற்ற கைதிகளைப் போல கருணை அடிப்படையில் முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் விடுதலையை சாத்தியமாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: