பி.எட். கல்லூரிகளில் சேர ஜூலை 28 வரை விண்ணப்பம்

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பி.எட் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு ஜூலை 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பி.எட் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், வெலிங்டன் சிமாட்டி கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், வேலூரில் உள்ள அரசு பி.எட் கல்லூரிகள், லட்சுமி கல்வியியல் கல்லூரி - காந்திகிராமம், திண்டுக்கல், ஸ்ரீசாரதா கல்வியியல் கல்லூரி- சேலம், தியாகராசர் பர்செப்டார் கல்லூரி - மதுரை, வ.உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரி - தூத்துக்குடி, செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி - பாளையங்கோட்டை, என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி - திருவட்டாறு, அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி - தூத்துக்குடி ஆகிய இடங்களில் ஜூலை 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஞாயிற்றுகிழமை உள்பட அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்பம் வினியோகிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் ரூ.500ஐ செலுத்தி மாணவர்கள் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சுயசான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகல் அளித்து, ரூ.250 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணத்தை சென்னையில் பணமாக்கத்தக்க வகையில் ‘‘The Secretary, Tamilnadu B.Ed admissions, Chennai -600005’’ என்ற பெயரில் டிடியாகவும் சமர்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 29ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை, வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிகேணி, சென்னை-5 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

Related Stories: