அரசு சட்டக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், தனியார் சட்ட கல்லூரிகளுக்கு அனுமதி: அமைச்சர் சி.வி. சண்முகம்

சென்னை: அரசு சட்டக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், தனியார் சட்ட கல்லூரிகளுக்கு அரசு அனுமதி வழங்குவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து மாவட்ட நீதிமன்றங்கள் உள்ள இடத்தில் அரசு சட்ட கல்லூரி துவங்கலாம் என்ற விதிக்கு ஏற்ப காஞ்சிபுரத்தில் சட்டக்கல்லூரி அமைக்க அரசு முன்வருமா? என்று திமுக எம்எல்ஏ எழிலரசன் கேள்வி எழுப்பினார். மேலும் இதையடுத்து பிற மாநிலங்களில் அதிக சட்டக்கல்லூரி இருக்கும் போது தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகளை சேர்த்து கணக்கிட்டாலும் சுமார் 20க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளன என்றும் எம்எல்ஏ எழிலரசன் கூறினார். இதை தொடர்ந்து இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு மற்றும் புதுப்பாக்கம் உள்ளிட்ட 2 இடங்களில் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் இதை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். இதனை அடுத்து அரசு சட்டக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தான் தனியார் சட்டக் கல்லூரி அமைக்கலாம் என சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் சி.வி. சண்முகம் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து விழுப்புரம் சட்டக் கல்லூரியானது பேரவைக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Related Stories: