வங்கி சேவையில் தாமதம் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்: திருவொற்றியூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர், சுங்கச்சாவடி பஸ் நிறுத்தம் அருகே அரசு வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும்  மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு வைத்து பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 தினங்களாக சர்வர் பிரச்னை என கூறி, வங்கி சேவையில் தாமதம் ஏற்பட்டதாகவும் இதனால் பணம் எடுக்க, செலுத்த வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertising
Advertising

இதனையடுத்து நேற்றும், இதே நிலை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி கிளையை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் திடீரென திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார் வாடிக்கையாளர்களை சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: