ஆவின் பாலகங்கள் துவங்க யார் முன்வந்தாலும் ஜாதி, மதம், பேதம் பார்க்காமல் அனுமதி: ராஜேந்திர பாலாஜி

சென்னை: ஆவின் பாலகங்கள் துவங்க யார் முன்வந்தாலும் அனுமதி வழங்க பல்வளத்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் துவங்கப்பட்டு வருவதாகவும் எதன் அடிப்படையில் பாலகங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது? என்றும், மேலும் ஆவின் பாலக அனுமதி பெறுவதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் பாலகங்கள் பால்வளத்துறைக்கு சொந்தமான இடங்கள், அரசின் மற்ற துறைகளின் இடங்கள் மற்றும் தனியார் இடங்களிலும் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Advertising
Advertising

மேலும் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் ஆவின் பாலகங்கள் துவங்கலாம் என்றும் அதற்கு குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம், 10 ஆண்டுகளுக்கு சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ எடுத்துள்ளதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை அந்தந்த மாவட்ட ஆவின் மேலாளருக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்பட்ட ஆவணங்கள் பரிசீலித்து எந்த வில்லங்கமும் இல்லாத பட்சத்தில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். இதை தொடர்ந்து ஆவின் பாலகங்கள் துவக்க உரிய முறையில் அனுமதி கோரும் பட்சத்தில் யாருக்கு வேண்டுமானாலும் ஜாதி, மதம், பேதம் பார்க்காமல் அனுமதி வழங்கப்படும் என்று பல்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: