பாம்பன் அருகே தரைதட்டியது சரக்கு கப்பல்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு செல்வதற்காக கிரேன் பொருத்தப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று நேற்று பாம்பன் துறைமுகத்துக்கு வந்தது. மன்னார் வளைகுடா கடலில் அமைந்துள்ள குருசடைத்தீவு - சிங்கிலி தீவுக்கு இடையில் கடலில் பாம்பன் துறைமுகம் நோக்கி வந்தபோது, திடீரென குந்துகால் கடல் பகுதியில் தரைதட்டி நின்று விட்டது. 150 அடி நீளமுள்ள இக்கப்பல், கடல் அலையின் போக்கில் தரைதட்டி கரையோரத்தில் ஒதுங்கி நின்றது. இந்த கப்பல் மீட்கப்பட்டு குந்துகால் கடல் பகுதியை கடந்து, பாம்பன் துறைமுக கடல் பகுதிக்கு வந்தால்தான் பாம்பன் பாலத்தை கடந்து செல்ல முடியும். இதனிடையே கப்பல் குறித்து துறைமுக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: