2 முறை மாறுதல் செய்த பிறகும் புதிய பணியில் சேராத உதவி ஆணையருக்கு கமிஷனர் டோஸ்: புதிய அதிகாரி பணியில் சேர முடியாமல் தவிப்பு

சென்னை: இரண்டு முறை பணி மாறுதல் செய்த பிறகும் புதிய பணியில் சேராமல் உள்ள துணை ஆணையரை அறநிலையத்துறை ஆணையர் அழைத்து கண்டித்தார். ஆனாலும், அவர் பணி மாற மறுப்பதால், புதிய அதிகாரி, பணியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.  சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் துணை ஆணையர் கடந்த 2015ம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு கீழ் பணியாற்றிவந்த உதவி ஆணையர் ஜோதி லட்சுமிக்கு அந்த பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. அந்த நாள் முதல் அந்த கோயிலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஜோதி லட்சுமி துணை ஆணையர் பதவிக்கு யாரையும் நியமிக்க விடாமல் பார்த்து கொண்டார்.  இதனைத் தொடர்ந்து அவர் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதனால் ேஜாதி லட்சுமியை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் பிரசாதத்துடன் பல பொருட்கள் அடங்கிய பையை பலருக்கு கொடுத்து இடமாற்றத்தை ரத்து செய்துவிட்டார்.

இதன்பிறகு 2வது முறையாக இடமாற்றம் செய்தபோதும் அதே பையை பயன்படுத்தி அதையும் ரத்து செய்விட்டார். இவ்வாறு  துணை ஆணையர் அந்தஸ்து கொண்டு பதவியில் மூன்று ஆண்டுகளாக உதவி ஆணையராக பொறுப்பு வகித்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் 23 ஆணையர்களை இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி  நாமக்கலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருச்சியில் பணியாற்றி வந்த துணை ஆணையர் ெஜயப்பிரியா இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து துணை ஆணையர் ஜெயப்பிரியா பதவி ஏற்பதற்காக கடந்த வாரம் கோவிலுக்கு வந்தார். அவரை பதவி ஏற்க ஜோதிலட்சுமி அனுமதிக்கவில்லை. நான் மீண்டும் எனது பணி மாறுதலை ரத்து செய்துவிடுவேன். அதனால் நீங்கள் பழைய பதவிக்கே சென்று விடுங்கள் என்று ஜோதி லட்சுமி கூறியுள்ளார்.

மேலும், உதவி ஆணையர் ஜோதி லட்சுமி பிரசாதம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய பல பைகளை தயார் செய்துகொண்டு   பணியிட மாற்றத்தை ரத்து செய்ய முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் புதிய பணியில் சேராமல் உள்ள ஜோதிலட்சுமியை, அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி நேற்று அழைத்து கண்டித்துள்ளார். உடனடியாக நாமக்கல் சென்று பணி செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஜோதிலட்சுமியோ, நான் முதல்வர் எடப்பாடியை பார்த்து பேசிவிட்டேன். விரைவில் உங்களுக்கு உத்தரவு வரும். எனக்கு சென்னைக்கே மீண்டும் பணி மாறுதல் வரும் என்று கூறினாராம். இதனால் கமிஷனரும் அமைதியாகிவிட்டாராம். அதேநேரத்தில் புதிய பணியில் சேருவதற்காக குழந்தைகளுக்கு பள்ளி மாற்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு வந்த அதிகாரி தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் சென்னையில் குடும்பத்துடன் தவித்து வருகிறாராம்.

Related Stories: