மருந்து நிறுவனத்தின் 9,000 கோடி சொத்துக்கள் முடக்கம்

புதுடெல்லி: குஜராத்தைச் சேர்ந்த ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ என்ற மருந்து  தயாரிப்பு நிறுவனம், வங்கியில் கடன் வாங்கி பல கோடிகளை ஏமாற்றியுள்ளது. இது தொடர்பான வழக்கில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 9,778 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நேற்று நடவடிக்கை எடுத்தது.  சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள ஆந்திரா வங்கி உள்பட சில வங்கிகளில் மொத்தம் 5,000 கோடிக்கும் அதிகமாக இந்த நிறுவனம் கடன் வாங்கியுள்ளது.  ஆனால், கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததால் இந்த நிறுவனம் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை 8,100 கோடியாக அதிகரித்தது. கடன் மோசடி குறித்து ஆந்திரா வங்கி உள்பட பாதிக்கப்பட்ட வங்கிகள் சார்பில் அமலாக்கத்துறையிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளான வதோதராவைச் சேர்ந்த சந்தேசாரா சகோதரர்கள் தலைமறைவாகி விட்டனர்.

Related Stories: