சேலம் அருகே முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகள்: வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி

சேலம்: ஓமலூர் பள்ளிக்கூடம் அருகே முகாமிட்டுள்ள இரட்டை காட்டு யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் அதனை விரட்ட வனத்துறையினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டை வனசரகத்திற்குட்பட்ட குண்டுக்கல் பிரிவில் பயிரான்கொட்டாய் மற்றும் கிராமம் உள்ளது. மேலும் அப்பகுதியில் கடந்த 22ம் தேதி நள்ளிரவில் இரண்டு காட்டு யானைகள் நுழைந்துள்ளன. இதனை தொடர்ந்து வனத்துறையினர், கிராம,மக்கள் உதவியுடன் அந்த காட்டு யானைகளை தேடி வந்தனர். மேலும் குண்டுக்கல், பயிரான்கொட்டாய் கிராமத்தில் யானைகள் புகுந்துள்ளது குறித்து வனத்துறை சார்பில் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மூன்று குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டை நடத்திய வனத்துறையினர் பெண் யானை ஒன்றும் மகன் யானை ஒன்று இருந்ததும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை விரட்ட நேற்று இரவு வரை பல்வேறு முயற்சிகளை செய்தனர். ஆனால் போக்கு காட்டிய யானைகள் குண்டுக்கல் கிராமத்தில் இருந்து எருவம்பட்டி கிராமத்திற்கும் எருவம்பட்டியில் இருந்து குண்டுக்கல் கிராமத்திற்கும் மாறி மாறி சென்று வந்துள்ளன. மேலும் இந்த நிலையில் நேற்று அந்த காட்டு யானைகள் இரண்டும் குண்டுக்கல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து யானைகளை தருமபுரி வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: