பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பட்ஜெட் ஒதுக்கீடு கிடைக்குமா?

புதுடெல்லி: நலிவடைந்த நிலையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றான பிஎஸ்என்எல், நிதிச் சிக்கலில் தவிக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையும் ஏற்பட்டது. 4ஜி சேவை கூட இல்லாததால் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்துக்கு மாறத்துவங்கினர்.

Advertising
Advertising

இந்த சூழ்நிலையில், ்அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இந்த நிறுவனத்துக்கு குறைந்த பட்ச நிதி ஆதாரவை மத்திய அரசு அளிக்க வேண்டும். நிறுவனத்தை மீட்டெடுக்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன்மூலம் இந்த நிறுவனத்தை லாபத்தில் இயங்கச்செய்ய முடியும் என பிஎஸ்என்எல் நிறுவனத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: