கட்டணம் வசூலிப்பதால் தண்ணீர் பிரச்னையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும்; அமைச்சர் செங்கோட்டையன்

சத்தியமங்கலம்: தண்ணீருக்காக தனியார் பள்ளிகள் அரசை எதிர்பார்க்க கூடாது என்று சத்தியமங்கலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதால் தண்ணீர் பிரச்னையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். தண்ணீர் இல்லை என்று சொல்லி பள்ளியை மூடினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், தனியார் பள்ளிகளை கண்காணிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை நேற்று உத்தரவிட்டிருந்தது.

அதில் சில தனியார் பள்ளிகள் தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. மாணவர்கள் நலன் பாதிக்கும் வகையில் விதிகளுக்கு முரணாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.குடிநீர் தட்டுப்பாடு உள்ள பள்ளிகள் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து பள்ளிகள் செயல்படுவதற்கான நடவடிக்கையை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு செயல்பட தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பற்றாக்குறையால் மூடாமல், தனியார் பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதை கண்காணிக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதால் தண்ணீர் பிரச்னையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: