எனக்கு சிலர் அழுத்தம் கொடுத்தனர் ஊழலுக்கு எதிராக கண்ணை மூடி இருக்க முடியாது: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசம்

 திருமலை: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர் பேசியதாவது: பொதுமக்களுக்கு ஊழல் இல்லாத ஆட்சியை வழங்க வேண்டும். அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும். சீரழிந்துபோன அரசு நிர்வாகத்தை மீண்டும் சரி செய்வதற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சில விவகாரங்களில் கண்ணை மூடி இருக்க வேண்டும் என சிலர் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அவ்வாறு என்னால் இருக்க முடியாது. அதற்காகவே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளேன். அரசு நிர்வாகத்தில் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை அனைத்து இடத்திலும் ஊழல் இல்லை என்ற ஒரே நோக்கம் இருக்க வேண்டும். எந்த ஒரு காரணத்திற்கும் ஊழல் இருக்க கூடாது.

ஆந்திர அரசு வெளிப்படையான நிர்வாகத்தை செயல்படுத்தும் முறை நாட்டுக்கே முன்னுதாரணமாக கொண்டு வரவேண்டும். போலவரம் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி நிபுணர்கள் கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: