மதுரையில் 5.54 கோடி செலவில் சிறுவர்களுக்கான கூர்நோக்கு இல்ல கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: மதுரை அரசினர் கூர்நோக்கு இல்ல வளாகத்தில் 75 சிறுவர்கள் மற்றும் 25 சிறுமியர்கள் தங்கும் வகையில் துயிற்கூடங்கள், உணவருந்தும் கூடங்கள், வகுப்பறைகள், பணியாளர் அறைகள், நூலகங்கள், பொழுதுபோக்கு அறைகள், மருத்துவ அறைகள், கழிவறைகள், குளியலறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் 5 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான கூர்நோக்கு இல்ல கட்டிடங்கள் மற்றும் 49 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புனரமைக்கப்பட்ட இளைஞர் நீதி குழும கட்டிடம் மற்றும்  அலுவலக கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சரோஜா, ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை  செயலாளர் மணிவாசன், சமூக பாதுகாப்பு துறை ஆணையர் லால்வேனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: