பண்ருட்டி: பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கோபுர மின் விளக்கு முறையாக பராமரிக்கப்படாததால் இரவு நேரத்தில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தின் வர்த்தக மையமாக திகழும் பண்ருட்டி நகருக்கு வியாபார ரீதியாக வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தங்கள் தேவைக்காக பண்ருட்டி நகருக்கு வருகின்றனர். இதன்படி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இரவில் மின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, அமரும் பென்ச் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்து தரப்படவில்லை என பயணிகள் புகார் கூறுகின்றனர். இரவில் மின் வசதியில்லாததால் பயணிகள் மத்தியில் திருட்டு பயம் அதிகரித்துள்ளது. பண்ருட்டி நகர நிர்வாகம் பேருந்து நிலையத்தில் கோபுர மின் விளக்கு வைத்துள்ளது. ஆனால் அந்த கோபுர விளக்கு பராமரிப்பின்றி காட்சிப் பொருளாகவே உள்ளது. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பை கருதி மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….
The post பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பராமரிப்பற்ற உயர்கோபுர மின்விளக்கு: இரவு நேரத்தில் பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.