தமிழகத்தில் இந்த கல்வியாண்டு ஆண்டு முதல் புதிய பாட திட்டத்தில்தான் இனி தேர்வு

சென்னை: தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின் கீழ்தான் நடத்தப்படும். பழைய பாடத்திட்டத்தில் படித்தவர்களும் இனிமேல் புதிய பாடத்திட்டத்தில்தான் ெபாதுத் தேர்வு எழுத வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 2018-19ம் கல்வி  ஆண்டில் பிளஸ் 1 வகுப்புக்கும், 2019-20ம் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 2 வகுப்புக்கும்  புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்றால்தான் ஒரு மாணவர் உயர் கல்விக்கு செல்ல முடியும்.

இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் நடந்த மேற்கண்ட வகுப்புகளுக்கான தேர்வில் பழைய பாடப்புத்தகங்களின் அடிப்படையில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அதே முறையில் தேர்வு எழுத வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

தற்போது அந்த வாய்ப்புகளுக்கான அவகாசத்தை தேர்வுத்துறை ரத்து செய்துள்ளது.  இதன்படி, வரும் 2020 மார்ச் மாதம் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்படி மட்டுமே நடத்தப்படும். மேலும், பழைய பாடத்திட்டத்தில் இனி மாணவர்கள் தேர்வு எழுத முடியாது.  ஏற்கனவே, பழைய பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத் தேர்வுக்கு வராத மாணவர்கள் அந்த விடுபட்ட பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2020 மார்ச் மாதம் நடக்கும் உள்ள தேர்வுகளில் எழுதிக்கொள்ளலாம்.

Related Stories: