அதிமுக மக்களவை தலைவராக ஓபிஎஸ் மகன் நியமனம்

சென்னை: மக்களவை தேர்தல், நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் பாஜ கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் மத்தியில் ஆளும் பாஜகவாலும், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவாலும் ஒன்னும் செய்ய முடியவில்லை. தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் மட்டும் போராடி வெற்றி பெற்றார்.

கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது. அதில், ரவீந்திரநாத்குமார் எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு அதிமுக எம்.பி, கட்சியின் மக்களவை தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Related Stories: