சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு: சவரன் ரூ.25,688-க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 -ஆக உயர்ந்தது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.25,688 ஆக உயர்ந்தது. இதையடுத்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,211 ஆக உயர்ந்தது. சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.25,176-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertising
Advertising

இதையடுத்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.3,147-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராமுக்கு 20 பைசா உயர்ந்து, ரூ.40.30 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.40,300 ஆகவும் இருந்தது. இந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.25,688 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 24 கேரட் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.26,936 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.3,367-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து 40.90 காசுகளுக்கும், ஒரு கிலோ ரூ.40,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: