ஓட்டுனர் பணிக்கான கல்வி தகுதியை நீக்க பரிசீலனை

புதுடெல்லி: போக்குவரத்து வாகன ஓட்டுனர் பணியில் சேருவதற்கான குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்கப்பட உள்ளது.  போக்குவரத்து வாகன ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனினும், நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் ஏராளமானவர்கள் கல்வி தகுதி இல்லாமலும், வேலை வாய்ப்பின்றியும் இருந்து வருகின்றனர். ஆனால், இவர்கள் எழுத்தறிவும், வாகனங்களை ஓட்டும் திறமையையும் கொண்டுள்ளனர். இந்நிலையில், மத்திய போக்குவரத்து துறை சார்பில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அரியானா அரசு, வாகன ஓட்டுனருக்கான கல்வி தகுதியை நீக்கும்படி வலியுறுத்தியது. ‘ஏராளமானோர் தங்கள் அன்றாட ழ்வாதரத்துக்காக குறைந்த வருமானம் ஈட்டும் ஓட்டுனர் உள்ளிட்ட பணிகளை நம்பியுள்ளனர்.

ஆனால், ஓட்டுனர் திறமையை  பெற்றிருந்தும்  கல்வி தகுதி இல்லாததால் வேலை வாய்ப்பை இழக்கின்றனர்’ என்றும் அது தெரிவித்தது. இந்த கல்வி தகுதியை நீக்கினால், போக்குவரத்து துறையில் உள்ள 22 லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறையை சரி செய்ய இயலும். இதையடுத்து, கல்வித் தகுதியை நீக்க மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதற்கான சட்டத் திருத்தத்தை, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிலும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: