சென்னை: மக்களவையில் தமிழக எம்பிக்கள் தமிழ் வாழ்க முழக்கமிட்டு பதவி பிரமாணம் செய்ததால், இந்திய அளவில் தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று முதல் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிகள் இன்று பதவியேற்றனர். மக்களவையின் தற்காலிக சபாநாயகர் வீரேந்திரக் குமார் எம்.பி.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழக எம்.பிக்கள் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர். தயாநிதி மாறன் “வாழ்க தமிழ்“, “வாழ்க கலைஞர்“, “வாழ்க பெரியார்“ என்ற முழக்கத்துடன் பதவியேற்று கொண்டனர். கனிமொழி “வாழ்க தமிழ்“, “வாழ்க பெரியார்“ என்று பதவியேற்றார்.